ஞாயிறு, 18 ஏப்ரல், 2021

49. என்னருகே நீ இருந்தால்!

என்னருகே நீயிருந்தால் - திருடாதே - 1961


1961 அம் ஆண்டு வெளிவந்த 'திருடாதே' படத்துக்கு இசை அமைத்தவர் திரு எஸ் எம் எஸ். ஆனால் அதில் இடம் பெற்ற 'என்னருகே நீயிருந்தால்' பாடலுக்கு இசை அமைத்தவர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி.

படத்தின் டைட்டிலில் இந்தப் பாடல் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசை அமைத்ததாகக் குறிப்பிடப்படாவிட்டாலும், கிராமஃபோன் இசைத்தட்டில் இசை விஸ்வநாதன்-ராமமூர்த்தி பெயர் குறிப்பிடப் பட்டிருக்கிறது என்று சிலர் கூறக் கேட்டிருக்கிறேன்.

HMV நிறுவனத்தினர் Legends என்ற காஸட் தொகுப்பில் விஸ்வநாதன்-ராமமூர்த்தியின்  பாடல்களைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார்கள்.அதில் திரு எம் ஜி ஆர் இந்தப் பாடலை அந்தப் படத்தில் சேர்க்க விரும்பியதால் அவ்வாறே சேர்க்கப்பட்டதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

வேகமான நடையில் செல்லும் இந்தப் பாடல் மூன்று சரணங்களைக் கொண்டது. மூன்று சரணங்களுக்கும் மூன்று வகை இடையிசை. 

வயலின், புல்லாங்குழல், மாண்டலின் போன்ற ஒரு சில இசைக்கருவிகளை மட்டுமே பயன்படுத்தி மனதை மகிழ்விக்கும் தன் கலையை இங்கும் வெளிக்காட்டி இருக்கிறார் மெல்லிசை மன்னர். அழகான ஹம்மிங்கும் உண்டு.

MGR க்கு அதிகம் பயன்படுத்தப்படத PB ஶ்ரீநிவாஸ், P  சுசீலாவின் பங்களிப்பு பாடலுக்கு சிறப்பைச் சேர்க்கிறது.

பாடல் முழுவதும் கேள்விகளாக ஒலிப்பது போல் பாடலை வடிவமைத்திருக்கிறார்  கவிஞர் கண்ணதாஞன்.

பெரும்பாலான கேள்விகள் பதில் தேவைப்படாத rhetorical கேள்விகள்.

இரண்டு கேள்விகளுக்கு மட்டும் பதில் இடம் பெறச் செய்திருக்கிறார் கவிஞர்.

வஞ்சி இடை கெஞ்சுவதேன்? பிஞ்சு மொழி கொஞ்சுவதேன்?
கெஞ்சுவதும் கொஞ்சுவதும் வஞ்சியரின் சீதனமே!

இளமையிலே காதல் வரும், எதுவரையில் கூட வரும்?
முழுமை பெற்ற காதலெல்லாம் முதுமை வரை ஓடி வரும்!

காதலுக்கு எவ்வளவு அற்புதமாக எளிமையாக ஒரு விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார் கவிஞர்!


வெள்ளி, 16 ஏப்ரல், 2021

48. MSV இன் இனிமை மயக்கும் என்றும்!


MSV இசை அமைக்கத் துவங்கி சுமார் 30 வருடங்களுக்குப் பிறகு 1980 இல் வெளி வந்த இந்தப் பாடலின் இசையில் எத்தனை பொலிவு, இனிமை, மணம்! கண்ணதாசன் வரிகளும், SPB இன் deliveryயும் பாடலுக்கு மேலும் பொலிவு சேர்க்கின்றன.