செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

23. இசை வேந்தருக்கு இன்னும் ஒரு அஞ்சலி



மெல்லிசை மன்னர் மறைந்து ஒரு மாதம் ஆகப் போகிறது. ஆயினும், அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. MSVயின் இசைக் குழுவில் ஆர்மோனியக்  கலைஞராகப் பணியாற்றிய  திரு தியாகராஜன் (MSVயின் மீது இவருக்கு இருக்கும் பக்தியின் வெளிப்பாடாக இவர் தன் பெயரை  தியாகராஜன் என்று குறிப்பிடுகிறார்!) 9/8/15 அன்று தி.நகரில் அமைந்துள்ள பிட்டி தியாகராயர் அரங்கில் நடத்திய இசை நிகழ்ச்சி 'என்றென்றும் எம் எஸ் வி - இசை வேந்தருக்கு எங்கள் இதய அஞ்சலி'. நுழைவுக் கட்டணம் இன்றி அனைவரும் அனுமதிக்கப்பட்டது நிகழ்ச்சியின் சிறப்பு.

இசை நிகழ்ச்சியை நடத்திய கீர்த்தி in ஜெயம் என்ற இசைக்குழு  இவரது குடும்பத்தினரால் நடத்தப்படுகிறது. தியாகராஜனின் மகன் டில்லி பாபு இசைக்குழுவை இயக்க, மருமகள்  கிருத்திகா நிகழ்ச்சியைத் தொகுத்தளித்ததுடன்,  பல பாடல்களையும் பாடினார். இவர்கள் நடத்தும் இசைப்பள்ளி மாணவிகள் சிலரும் குழுவாக 'பார்த்த ஞாபகம் இல்லையோ, 'வரவு எட்டணா' ஆகிய இரு பாடல்களைப் பாடினர். மாணவிகளில் ஒருவருக்கு வயது மூன்று இருக்கும். மற்றவர்கள் மூன்றிலிருந்து பத்து வயதுக்கு உட்பட்டவர்கள்!

சுதீஷ், கார்த்திகேயன் ஆகிய  இரண்டு பின்னணிப் பாடகர்களும் பங்கு கொண்டு MSVக்குத் தங்கள் மரியாதைச்  செலுத்தினர். நிகழ்ச்சியை நடத்த உதவி செய்த அருள் அப்பளம் அதிபர் திரு சந்திரன், கவிஞர் காமகோடியான்  உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் பாடல்களுக்கு இடையே கௌரவிக்கப்பட்டாலும், இவை சுருக்கமாக அமைந்ததால், இசை நிகழ்ச்சியில் தொய்வு ஏற்படவில்லை.

திரு தியாகராஜன் தனது குடும்பத்தினருடன் MSVயின் உருவப் படத்தை வணங்கி அவருக்கு அஞ்சலி செலுத்தியதும் இசை நிகழ்ச்சி தொடங்கியது.
நிகழ்ச்சியில் 29 பாடல்கள் பாடப்பட்டன. பாடல்களின் பட்டியல் இதோ!

1. நீராடும் கடலுடுத்த (தமிழ்த் தாய் வாழ்த்து)
2. மதிவதனம் மலர் நயனம் (சாயிபாபா மீதான பக்திப் பாடல். இதை MSVயின் இசையில் கிருத்திகாவே பாடியிருக்கிறார். ஆறு பாடல்கள் கொண்ட ஆல்பம் இது.)
3. கண்ணன் வந்தான் (ராமு)
4. நெஞ்சம் மறப்பதில்லை (நெஞ்சம் மறப்பதில்லை)
5. இந்தப் பச்சைக் கிளிக்கொரு (நீதிக்குத் தலை வணங்கு)
6. நினைக்கத் தெரிந்த மனமே (ஆனந்த ஜோதி)
7. யாதும் ஊரே (நினைத்தாலே இனிக்கும்)
8. கண் போன போக்கிலே (பணம் படைத்தவன்)
9. மனிதன் என்பவன் (சுமை தாங்கி)
10. ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து (நினைத்ததை முடிப்பவன்)
11. ஆறு மனமே ஆறு (ஆண்டவன் கட்டளை)
12. பார்த்த ஞாபகம் இல்லையோ (புதிய பறவை)
13. ராகங்கள் பதினாறு (தில்லுமுல்லு)
14. மயக்கமா கலக்கமா (சுமை தாங்கி)
15. நாளை நமதே (நாளை நமதே)
16. விழியே கதை எழுது (உரிமைக்குரல்)
17. என்னுயிர்த் தோழி (கர்ணன்)
18. ஒரு பெண்ணைப் பார்த்து (தெய்வத்தாய்)
19. துள்ளுவதோ இளமை (குடியிருந்த கோயில்)
20. மலர்ந்தும் மலராத (பாசமலர்)
21. வரவு எட்டணா (பாமா விஜயம்)
22. நாளை இந்த வேளை (உயர்ந்த மனிதன்)
23. அவள் பறந்து போனாளே (பார் மகளே பார்)
24. ஆண்டவனே உன் பாதங்களை (ஒளி விளக்கு)
25. உனக்கென்ன மேலே நின்றாய் (சிம்லா ஸ்பெஷல்)
26. மாலைப் பொழுதின் (பாக்ய லக்ஷ்மி)
27. பாரதி கண்ணம்மா (நினைத்தாலே இனிக்கும்)
28. பொன்னொன்று கண்டேன் (படித்தால் மட்டும் போதுமா?)
29. சொன்னது நீதானா? (நெஞ்சில் ஓர் ஆலயம்)

இசைக்குழுவினரின் performance  மிக  அருமையாக இருந்தது. பல நுணுக்கங்கள்  கொண்ட மெல்லிசை மன்னரின் பாடல்களின் வாத்திய இசையை அப்படியே வெளிப்படுத்துவது மிகவும் அரிதான ஒரு விஷயம்.

ஒவ்வொரு பாட்டுக்கும் எழுந்த கரவொலி மெல்லிசை மன்னரின் பாடல்கள் எந்த அளவுக்கு அனைவரையும் ஈர்த்திருக்கின்றன என்பதை எடுத்துக் காட்டுவதாக இருந்தது.

ஒவ்வொரு பாடலையும் ஆயிரம் முறைகளுக்கு மேல் கேட்டிருந்தாலும், மீண்டும் அந்தப் பாடல்களைக் கேட்கும்போது ஒரு பிரமிப்பு ஏற்படுகிறது. இதுதான் மெல்லிசை மன்னரின் இசையின்  வலிமையும், சிறப்பும்.

இந்நிகழ்ச்சி இந்த இசைக்குழுவினரின் அரங்கேற்றமாம். இசைக் கலைஞர்களின் திறமை, கடின உழைப்பு இவற்றுடன்   மெல்லிசை மன்னரின் அருளும் சேர்ந்து இந்த இசைக்குழுவுக்கு எண்ணற்ற வாய்ப்புகளையும், வெற்றிகளையும் குவித்துத் தரும் என்பதில் ஐயமில்லை.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக