வெள்ளி, 16 அக்டோபர், 2020

47. நதிகளின் சங்கமம்

  

படம்: குழந்தைக்காக (1966)

பாடல்: தேவன் வந்தான்

பாடல் ஆசிரியர்; கண்ணதாசன்

இசை: எர் எஸ் வி

மூன்று நதிகள் தனித் தனியே உற்பத்தியாகிக் கடலில் சங்கமிப்பது போல் மூன்று மதங்கள் குறித்த வரிகள் தனித் தனியே தொகையறாவாகத் தொடங்கிப் பாடலாக சங்கமிக்கின்றன

' நதிகள் பிறக்குமிடம் பலவாகும். எல்லா  நதியும் கலக்குமிடம் கடலாகும்' என்ற வரிகளை மூவரும் இணைந்து பாடுகின்றனர். பொதுவான பல்லவியை மூவரும் சேர்ந்து பாட, பிறகு, ஒவ்வொரு மதத்துக்கும் ஒரு சரணம்

பல்லவியில் முதலில் இந்து மதக் கடவுள் பற்றிய வரி வருகிறது. பல்லவியில் கடைசியில் வரும் இயேசு சரணத்தில் முதலில் வருகிறார்மேலும் சரணத்தில் இஸ்லாமியரான ராமதாஸ் இயேசு பற்றிய வரிகளையும், இந்துவான மேஜர் அல்லா பற்றிய வரிகளையும், கிறிஸ்துவரான மனோகர் இந்துக் கடவுள்களைப் பற்றியும் பாடுகிறார்கள்.

ஒவ்வொரு மதம் குறித்த வரிகளுக்கும் அவற்றுக்கு முன் வரும் பின்னணி இசைக்கும் ஏற்ற விதத்தில் இசை அமைத்திருப்பது மெல்லிசை மன்னர் மிக இயல்பாகச் செய்யும் விஷயம். ஆனால் மெல்லிசை மன்னரின் பாடலை முதலில் கேட்பவர்களுக்கு இது பிரமிப்பூட்டக் கூடும்.

துவங்கும்போது சிறிதாகத் துவங்கி பின்பு பெருக்கெடுத்து ஓடுவது நதியின் இயல்பு. நதிகள் பற்றித் துவங்கும் இந்தப் பாடலும் தொகையறா போல் மெதுவான வேகத்தில் தொடங்கிப் பிறகு துள்ளலாக ஆடி, ஓடி வருகிறது.

இந்தப் பாடலைப் பாடுபவர்கள் அதிகம் படிக்காத கொள்ளையர்கள் என்பதால், இந்தத் துள்ளலான அமைப்பு அவர்கள் பாடுவதற்கு ஏற்ப இயல்பாக அமைந்திருக்கிறது. கவிஞர், மெல்லிசை மன்னர் மற்றும் இயக்குனரின் கூட்டு முயற்சி பாடலையும், காட்சியையும்  மிகப் பெரிய உயரத்துக்குக் கொண்டு சேர்த்துள்ளது.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக