புதன், 5 ஜனவரி, 2011

8. An appeal To Mellisai Mannar

 Reproduction of my posting in msvtimes.com/forum on Dec 11, 2009

மெல்லிசை மன்னரிடம் நேரில் உரையாடும் நெருக்கம் எனக்கு இல்லை. அதனால் அவரின் அன்புக்குப் பாத்திரமான நமது அமைப்பின் மைய உறுப்பினர்கள் மூலம் மெல்லிசை மன்னருக்கு இந்த வேண்டுகோளை விடுக்கிறேன்:

ஈடில்லாத தங்கள் இசை மூலம் என் வாழ்க்கைக்கு இனிமையும் சுவையும் மகிழ்ச்சியும் ஊட்டிய  மெல்லிசை மன்னரே,

வணக்கம்.
சுற்றி வளைக்காமல் என் வேண்டுகோளை உங்கள் முன் வைக்கிறேன்.

தாங்கள் கம்ப ராமாயணப் பாடல்களுக்கு இசை அமைக்க வேண்டும். கவிஞரின் தமிழுக்கு உயிர் கொடுத்த நீங்கள், தமிழின் உயிருக்கும் இசை வடிவம் தர வேண்டும். இது உங்கள் சாதனைகளின் மணிமகுடமாக, உங்கள் Magnum Opus ஆக விளங்கும் என்பதில் ஐயமில்லை.

கம்ப ராமாயணம் பத்தாயிரம் பாடல்களுக்கு மேல் கொண்ட ஒரு காப்பியம். பத்தாயிரம் பாடல்களுக்குமே நீங்கள் இசை அமைக்க வேண்டும் என்பது என் பேராசை. ஆயினும், காலம், வசதி போன்றவற்றைக்கருதி, நீங்கள் இதைப் பகுதி பகுதியாகச் செய்யலாம். உதாரணமாக, சுந்தர காண்டத்தில் துவங்கி திருமுடி சூட்டுப் படலத்தில் முடிக்கலாம். அல்லது இராமர் பிறப்பு, சீதா கல்யாணம், அனுமனின் அற்புதச் செயல்கள், இராம பிரான் மணி மகுடம் சூட்டல் என்று சில குறிப்பிட்ட படலங்களை எடுத்துக் கொள்ளலாம்.

அல்லது, ஓரிரு வருடங்கள் முன்பு, நடிகர் சிவகுமார், இராமாயணக் கதை முழுவதையும், தேர்ந்தெடுத்த நூறு பாடல்களில் சொல்லி முடித்தது போல், காப்பியம் முழுவதையும் தழுவும் வகையில், சில நூறு பாடல்களைத் தேர்ந்தெடுத்து இசை அமைக்கலாம்.

நீங்கள் இப்பணியை ஏற்பது என்று முடிவு செய்தால், இது குறித்துத் தமிழறிஞர்களின் ஆலோசனையைப் பெறலாம். குறிப்பாக, 'கம்பன் கழகம்' என்ற அமைப்பு உங்களுக்குப் பல விதங்களிலும் (பாடல்களின் சிறப்பான பொருளை விளக்குதல் போன்றவை) உதவ முன் வரும் என்று நம்புகிறேன். உங்கள் மீது பெருமதிப்பு வைத்திருக்கும் எஸ் பி எம் அவர்கள் கம்பன் கழகத்தின் முக்கிய உறுப்பினர்.

கம்பனின் அம்சங்கள் நிரம்பப் பெற்ற கண்ணதாசனின் பாடல்களுக்கும், இரண்டாம் கம்பன் என்று அழைக்கப்படும் வாலியின் பாடல்களுக்கும் இசை அமைத்திருக்கும் தாங்கள், தமிழ் மொழியின் தலையாய கவிஞரின் பாடல்களுக்கும் இசை அமைக்க, நாங்கள் அதைக் கேட்டு ரசிக்க வேண்டாமா? கவிச்சக்கரவர்த்தியின் பாடல்களுக்கு இசைச்சக்கரவர்த்தி இசை அமைப்பதுதானே பொருத்தமாக இருக்கும்?

'செவிக்குத் தேன் என இராகவன் புகழினைத் திருத்தும் கவிக்கு நாயகன்'

என்று அனுமனை வர்ணிக்கிறான் கம்பன். இந்த வர்ணனை கம்பனுக்கும் பொருந்தும் என்பார்கள் தமிழ் அறிஞர்கள். நீங்கள் கம்பராமாயணத்துக்கு இசை அமைத்தால், இந்த வர்ணனை உங்களுக்கும் பொருந்தும்! திருத்தம் என்ற சொல்லுக்கு அழகு செய்தல் என்றும் ஒரு பொருள் உண்டு. ராமாயணம் என்னும் கதைத்தேனைக் கவித்தேன் ஆக்கி வழங்கினான் கம்பன். அந்தக் கவித்தேனை உங்கள் இசைத்தேனுடன் சேர்ந்து சுவைக்கும் அனுபவத்துக்கு ஈடாக வேறு எதுவுமே இருக்காது.

'இந்தப்பணி உங்களுக்கு ஒரு வேள்வியாக அமையும்' என்று சொல்ல விழைகிறபோது, என் உள்ளம் என்னைக் கேலி செய்கிறது. 'அட முட்டாளே, அவருடைய இசைப்பணி முழுவதுமே ஒரு வேள்விதானே? அதை மறந்து விட்டாயா?' என்று. பல யாகங்களைச் செய்தவர்கள் கூட, எல்ல யாகங்களுக்கும் சிகரகமாக 'அஸ்வமேத   யாகம்' என்ற மாபெரும் வேள்வியைச் செய்ய விழைவார்கள். அதுபோல், கம்பராமாயண இசை உங்களுக்கு ஒரு அஸ்வமேத யாகமாக அமையட்டுமே!

ராமாயணம் யுகங்களைக் கடந்து நிலைத்து நிற்கும் ஒரு காவியம். எங்கெல்லாம் ராமாயணக்கதை சொல்லப் படுகிறதோ, அங்கெல்லாம் அனுமன் நின்று கண்களில் நீர் வழிய அதைக் கேட்டுக் கொண்டு நிற்பான் என்பது மரபு வழி வந்த நம்பிக்கை ('அதைப் பார்த்திருப்பேன் கண்ணீல் நீர் எழுதி' என்ற உங்கள் இசையில் கேட்ட கவிஞரின் வரி நினைவுக்கு வருகிறது.) அனுமனைப் போற்றும் பாடலில், 'யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்' என்றுதான் வருகிறது. அனுமன் கூட ராமகாதையை இசை வடிவில் கேட்பதைத்தான் விரும்புகிறான். அதனால் உங்களின் இந்த மாபெரும் வேள்விக்கு அனுமன் துணை நிற்பான்!

மனித இனம் உள்ளவரை ராமாயணம் வாழும். ராமாயணம் வாழும் வரை அனுமன் பெயரும், கம்பன் பெயரும் நிலைத்து நிற்கும். இந்த இருவரின் பெயர்களோடு உங்கள் பெயரும் நிலைத்து நிற்கும்.

உங்கள் பணிக்கு முன்னோட்டமாக ஒரு சிறிய (சீரிய) பணியைச் செய்ய வேண்டுகிறேன். இதை ஒரு ரசிகனின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், ஒரு பாடல் பாடுவதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

கம்ப ராமாயணத்திலிருந்து ஒரு சிறிய பாடல். இது ஆய்ச்சியர் தயிர் கடைவதை வர்ணிப்பது. இந்தப் பாடலைச் சந்தத்துடன் பாடினால், மத்தினால் தயிர் கடையும் ஓசையைக் கேட்கலாம் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். இது போன்ற பாடல்களைச் ச்ந்தத்துடன் பாட, டி கே சி என்ற ஒரு தமிழறிஞர் இருந்தார். இன்று அப்படிப்பட்ட அறிஞர்கள் இருக்கிறார்களா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனல் தாங்கள் இப்பாட்டுக்கு இசை அமைத்தால், அந்த ஒலி வெளிப்படும் என்பதில் ஐயமில்லை. 'சின்னச் சின்ன இழை பின்னிப் பின்னி வரும்' என்ற பாடலைத் தறி ஓசை கேட்கும் சந்தத்தில் போட்டவராயிற்றே தாங்கள்! அன்பு கூர்ந்து இப்பாட்டுக்கு இசை அமைத்து மெகா டிவியில், என்றும் எம் எஸ் வி நிகழ்ச்சியின்போது இப்பாடலை உங்கள் அருமையான குரலில் பாடிக்காட்ட வேண்டும்.

தோயும் வெண்தயிர் மத்தொலி துள்ளவும்
தூய வெள்வளை வாய்விட்டரற்றவும்
தேயும் நுண்ணிடை சென்று வணங்கவும்
ஆயர் மங்கையர் அங்கை வருந்துவார்.


கம்பராமாயணத்துக்குத் தாங்கள் இசை அமைக்க வேண்டும் என்ற என் கோரிக்கை நிறைவேற வேண்டும் என்று அந்த இராமபிரான் அருள் புரிய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

என் வாழ்வின் மிக மகிழ்ச்சியான நேரங்களைக் கொடுத்ததற்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்ளவும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.

பெரியாழ்வார் கடவுளுக்கே பல்லாண்டு பாடினார். அவர் அடிச்சுவற்றைப் பின்பற்றி நானும் உங்களைப் பல்லாண்டு வாழ வேண்டும் என்று வாழ்த்தி வணங்குகிறேன்.

7. A Special Program For a Noble Cause (by RASA)

 Reproduction of my posting in msvtimes.com/forum on March 22, 2010.


I had the opportunity of attending this program.

A few days back, I read in The Hindu an interview of Dr. Ambika Kameshwar, who has been working with special children. I didn't read the interview fully but I noted two striking things about her. One, she said she had been using music and dance with special children to make their lives more stimulating. Second was her statement that she was grateful to God for showing her the right path (of working with special children.)

And what better music to use to stimulate people than the divine music of M.S.Viswanathan (MSV)

This was a function to felicitate Viswanathan Ramamurthy(VR) by RASA (Ramana Sunritya Aalayaa), the organization Ambika has been running, to promote arts, with emphasis on using them to impact the lives of special children.

The program had two parts. In the first part, 8 songs of VR were presented. In the second part 7 dances (set to VR's songs, again) were presented. The interregnum between the two parts was used to felicitate the duo.

Dr. Ambika in her introduction said that she had heard and heard VR's songs repeatedly and developed a relationship with them. The songs were presented on specific themes. I briefly give below explanations given by Ambika on the themes and and on how the songs chosen were related to the themes. I am giving these details for some songs, which I remember. The theme is given first, follwed by the song.

1) ஏற்பு: உள்ளத்தில் நல்ல உள்ளம் - கர்ணன் sung by Nikhil
(The theme is acceptance. Living as a differently abled person is not just resignation but acceptance of what is given to them in its totality, epitomized by the lines 'வருவதை எதிர் கொள்ளடா.')

2) துணை: மலருக்குத் தென்றல் பகையானால் - எங்க வீட்டுப் பிள்ளை sung by Poorna, Ambika's daughter.
(Certain relationships/companionships are indispensable. We cannot afford to be separated from them.)

3) பேராற்றல்: கண்ணுக்குக் குலமேது? - கர்ணன் sung by Shreya
(We have talents which we may not be aware of)

4) உயர்வு: மனிதன் என்பவன் தெய்வமாகலாம் sung by Gomagan, the conductor of the orchestra, a visually handicapped person.

5) தாய்மை: முத்தான முத்தல்லவோ? நெஞ்சில் ஓர் ஆலயம் sung by Dr.Ambika

(Thaaimai is selfless love. It comes from the mother. But if a father extends such selfless love, that should also be classified as Thaaimai. Ambika said that she was the mother of not only Poorna, her 'biological daughter' but of all the children in her organization.)

6) உறவு: கண்ணன் வருவான் - பஞ்சவர்ணக்கிளி sung by Poorna.

7) ஆலயம்: ஒருவர் வாழும் ஆலயம் நெஞ்சில் ஓர் ஆலயம் sung by Nikhil and Shreya

Cool தெய்வம்: சரவணப் பொய்கையில் - இது சத்தியம் sung by Shreya.

As the songs were presented on the dais, video stills of special children depicting the themes were shown on a side screen through a slide projector.

The orchestra was made up of differently abled people. This was the same orchestra that played a role in the film 'autograph' (for the song 'ovvoru pookkalume')

The orchestra and the singers did a commendable job, though we can't compare them to the professional groups.

Felicitations were offered by actor S.Ve. Shekar, Raghunathan of HMV, singer Rajkumar Bharathi and actor ARS. It was news to me that S.Ve.Shekar's wife is a granddaughter of G Ramanathan (GR). (S.Ve.Shekar said that this was his only qualification to take part in this function. He cited the fact of all TV and FM channels playing MSV's songs in the night as the evidence of the evergreen nature of the songs.)

Mr. Raghunathan, who has also helped Ambika in selecting the songs for the event, gave an objective presentation. He said that when there were two distinct styles represented by GR focusing on the classical aspects and 
CRS(C.R.Subbaraman)  focusing on western and modern music, it was VR who were able to integrate both styles. The uniqueness of VR's music - the reason why their music is everlasting, stems from the fact that they have been able to control the expression of passions by setting well defined parameters and not allowing the passions to go astray, he said. He also pointed out how their songs made the listeners visualise the scenes without the need to look at the visuals. His grandchildren were able to infer the scenes just by listening to the songs. 

Rajkumar Bharathi brought out the power of songs as outlined by Bharathiyaar in his Kuyil Paattu and how VR's music also held that power. ARS joined as an unlisted speaker. He said that the entire world was aware of MSV's greatness except one organization called the Govt. of India.

MSV and TKR were given the title இசை ரஸச் செம்மல், which also carried cash awards. The cash was donated by the duo to RASA. 


MSV, in his his acceptance speech, expressed his craving to do more and attributed his success to the people who worked with him. He also had a special word of thanks for TKR, for guiding him and helping him. (When I entered the hall, just before the start of the program, MSV also made the entry, while TKR had already arrived and was seated in the front row. TKR stood up to receive MSV and MSV bent down and touched TKR's feet.)

On behalf of MSVTimes, Mr. Ramki presented a contribution cheque which was given to Ambika by MSV.

The second part had dances on the following 7 themes. Ambika briefly explained the theme of each song.

1) அறிதல்: உன்னைத்தான் நான் அறிவேன் - வாழ்க்கைப் படகு

2) ஆனந்தம்: ஆடாத மனமும் உண்டோ? - மன்னாதி மன்னன்

3) இனிமை: திருப்புகழைப் பாடப் பாட - கௌரி கல்யாணம் (I am not sure whether this information is right. I have been under the impression that this song is from a private album and the music is by someone else.)

4) உரிமை: அதோ அந்தப் பறவை போல - ஆயிரத்தில் ஒருவன்

5) எனது: உலகம் பிறந்தது எனக்காக - பாசம்

6) இயற்கை: ஜகத் காஹத்வயனா பகவான் - ஆத்மி - Hindi

7) முழுமை: எங்களுக்கும் காலம் வரும் - பாச மலர் (The special children have no complaints. Whatever is given to them, they accept. they have no grievances.)

I am not given much to appreciation of dance but the dances appeared to be refreshingly different. The dances were arranged by  professionals. It was a new experience watching young girls (and a few boys) dancing for the songs 'adho andhap paravai pola' and 'ulagam piranthathu enakkaaga' with totally different but very appropriate dance movements. I do not know whether some of the participants are differently abled.

The last song 'engalukkum kaalam varum' was presented by special children (some of them were grown up.) I discovered a new dimension to this song, watching these children dance to this. All along, I had been thinking that this was a song of happiness (apparently carried away by the picturisation.) But I suddenly realized that this was not a song of happiness, but of hope. The lyrics only talk about expectations.

When I heard the lines,

வளரும் வளரும் என்றே காத்திருந்தோம்
மலரும் மலரும் என்றே பார்த்திருந்தோம்,

tears started rolling from my eyes because I had unconsciously related these lines to the special children.

And on hearing the last lines,

வஞ்சமில்லா வாழ்க்கையிலே தோல்வியுமில்லை

I virtually broke down. Mr. Mahesh who was sitting next to me and who was in a hurry to leave, could not get up from his seat and I had to shake him up.

It appeared that the immortal KaNNadaasan had written these lines only for these special children.

The event was the unveiling of yet another dimension of MSV's music. Just like Ambika has been using music and dance to brighten up these children's lives, she has also given me the hope that the greatness of MSV's compositions will be realized and given due recognition in future, when more and more dimensions of his songs are revealed.

6. MSV Songs in Airtel Super Singer Program

This is a reproduction of my post in msvtimes.com/forum on April 30, 2010.


My daughter is a regular watcher of Airtel Supersinger, Junior, Senior etc. Often forced to listen to this, I would constantly get irritated both by the songs and by the hollow comments of some of the judges.The present judges are better. Mano is clever and can articulate even commonplace observations to make them sound impressive. His hitrionic talents and sense of humor also help him in making a good impression. Chitra is a copybook judge making notes and commenting on specifics rather than canting aimlessly. And Subha is ok, at least being brief and not trying to act smart.

But this week was a pleasant surprise. 4 days of phenomenal show, with MSV present on the first three days. Apart from the fact that the song selections were brilliant, the way the singers, the judges and the audience enjoyed the songs was remarkable. The children were enjoying the songs sung by others also, though they might not have heard these sons earlier.The awe, the joy and the reflexive noddings of the heads by the judges were a sharp contrast from the mechanical and contrived behaviour of the judges all along.

Mano was profuse in his praise for MSV. He called him , 'Appa' and praised each and every song. It was news to me that he had worked as an assistant under MSV.

But I feel that MSV was a bit harsh in judging the performers. He can't expect the perfection that he would command from the professional singers,rom these children. The boy Shravan sang 'intha mandraththil oedi varum' beautifully but MSV said that the upper shatjamam needed improving. When Nithyasree sang 'adi ennadi ulagam,' MSV remarked that she could have chosen a better song (like Muththana muththallavo). He probably did not like a small girl singing a song with the theme that justifies breaking rules and traditions!

The honoring of musicians like Abu Gabriel, Prasad, Ganesh Krupa, Thumba Sekar, Sarangapani, Shyam Joseph etc. ended into emotional outpourings on either side, with tearful scenes. MSV was gracious in talking about his early days and how his musicians helped him in various ways. Sarangapani (S/o Nanjappa Reddiyar) appeared a little cold in the beginning but after MSV narrated his visiting Nanjappa Reddiar late night to hand over the award given by MSV times and Nanjappa Reddiar passing away the next morning, Sarangapani broke down. Abu Gabriel remarked that MSV desrved more than a Dhadha Palke award but regretted that he was not recognized at the all India level.

It was another 'Nathamennum Kovilile' from Monday to Thursday of this week. In addition to the songs mentioned by SRS, sung on that day, the other songs sung during the week are,
Adi ennadi ulagam
Unnidaththil ennaik koduththen
Mannavane azhalaama
Thillu mullu thillu mullu
Aadaatha nanamum undoe?
Kannan ennum mannan peraich chollach chollaa
enna enna vaarththaigaloe?
Nenjathththile nee netru vantdhaay
Thedinen vandhadhu

It will be business as usual from next week with cacophonies taking their places, which they had reluctantly vacated for a week. But I am sure that the children who have been initiated into MSV's music and have discovered the joy of singing MSV's songs, will keep their interest in MSV's music alive for a long time. This week's program will also remain the best week of all Airtel super Singer programs to be preserved in the annals of history.

5. நாதமென்னும் கோவிலிலே

 This is a reproduction of my post in msvtimes.com/forum on April 16, 2010


MSVtimes  arranged a unique programme "Naadhamennum Kovilile", bringing out the nuances, intricacies and several subtle dimensions of the compositions of Mellisai Mannar.  Sai Kumar's Sai Sangeeth Prakruthi was the music troupe.. The Programme was held on 14.04.2010 at Sir Pitti. Thyagarajar Kalai Arangam, G.N. Chetty Road, T.Nagar, Chennai -17.

A review of this program:
ஆங்கிலத்தில் 'first things first' என்பார்கள். எனவே ஒரு வேண்டுகோளுடன் துவங்குகிறேன். வேண்டுகோள், முரளி மற்றும் வத்ஸனின் குடும்பத்தினர்க்கு. முதலில் முரளி, வத்ஸன்  இருவருக்கும் திருஷ்டி சுற்றிப் போடுங்கள். ஏனெனில், நிகழ்ச்சிக்கு வந்திருந்த அத்தனை பேரையும் இந்த இரட்டையர் கவர்ந்து விட்டார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. திருஷ்டி கழிக்கும் முகமாக நானே சில குறைகளையும் குறிப்பிடப் போகிறேன் என்பது வேறு விஷயம்!

முதலில், நிகழ்ச்சியில் அலசப்பட்ட பாடல்களின் பட்டியலைக் கொடுத்து விடுகிறேன். இதை என் நினைவிலிருந்து எழுதுவதால், ஒரு சில பாடல்கள் விட்டுப் போக வாய்ப்பு உண்டு. வரிசையிலும் மாற்றம் நேர்ந்திருக்கும்.

1) இறை வணக்கம் - ஆயிரம் கரங்கள் நீட்டி - கர்ணன்
2) நீராடும் கடலெடுத்த - தமிழ்த் தாய் வாழ்த்து
3) தமிழுக்கும் அமுதென்று பேர் - பஞ்ச வர்ணக்கிளி
4) புல்லாங்குழல் கொடுத்த - கிருஷ்ண கானம்
5) அன்பே வா - அன்பே வா
6) அழகிய தமிழ் மகள் இவள் - ரிக் ஷாக்காரன்
7) என்ன வேகம் நில்லு பாமா - குழந்தையும் தெய்வமும்
8)  நான் நன்றி சொல்வேன் - குழந்தையும் தெய்வமும்
9) அடடா என்ன அழகு - நீ
10) வெள்ளிமணி ஓசையிலே - இரு மலர்கள்
11) மதுரா நகரில் - பார் மகளே பார்
12) சிரித்தாள் தங்கப் பதுமை - கண்ணன் என் காதலன்
13) ஆறோடும் மண்ணில் - பழனி
14) என்னுயிர்த் தோழி - கர்ணன்
15) உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
16) சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் - ராமன் எத்தனை ராமனடி
17) எங்கிருந்தோ ஆசைகள் - சந்திரோதயம்
18) கேள்வியின் நாயகனே - அபூர்வ ராகங்கள்
19) வேலாலே விழிகள் - என்னைப் போல் ஒருவன்

ஒவ்வொரு பாடலும் தேர்வு செய்யப்பட்டதற்கு ஒரு காரணம் உணடு. ஒவ்வொரு பாடலின் சிறப்பையும் முரளியும், வத்ஸனும் எந்த அளவுக்கு எளிமையாக விளக்க முடியுமோ அந்த அளவுக்கு எளிமையாக விளக்கினார்கள் என்பதை அனைவருமே ஏற்றுக்கொள்வார்கள். குறிப்பாக, தாங்கள் சொல்லும் விஷயம் சரியாக எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்பதில் முரளி சற்று அதிக அக்கறையும், முயற்சியும் எடுத்துக் கொண்டார் என்று தோன்றியது. வத்ஸனின் இயல்பான உரையாடலும், நகைச்சுவை உணர்வும் நல்ல வரவேற்பைப் பெற்றன. இருப்பினும், எளிய தமிழில் சரளமாகப் பேசும் திறன் படைத்த நண்பர் வத்ஸன், ஆங்கிலச் சொற்களைப்  பயன்படுத்தியதைச் சற்று குறைத்துக் கொண்டிருக்கலாம் என்பது என் கருத்து.

துவக்கத்தில், விளக்கங்கள் சற்று நீளமாகவே இருந்தன. இசை பிறந்தது எப்படி, அன்பே வா பாடலுக்கான விளக்கம், எப்படி மெல்லிசை மன்னர் chordsஐப் பயன்படுத்தி, கர்நாடக ராகங்களில் மேற்கத்திய இசையைப் புகுத்தி, அவற்றை மெல்லிசை ஆகுகிறார் போன்ற விளக்கங்கள் எவ்வளவு பேருக்குப் புரிந்திருக்கும் என்பதுடன், இந்த விளக்கத்தின் பயன் (purpose) என்ன என்பதும் எனக்குப் புரியவில்லை.

பல பாடல் விளக்கங்கள் மிக அருமையாக அமைந்து ரசிகர்களைக் கவர்ந்தன என்பதை அவர்களின் அனிச்சையான கரவொலியே வெளிப்படுத்தியது. குறிப்பாக, 'நீராடும் கடலெடுத்த' பாடலுக்கு ஏன் மெல்லிசை மன்னர் 'மோகனத்தைத்' தேர்ந்தெடுத்தார், 'தமிழுக்கும் அமுத்தென்று பேர்' பாடலின் முத்தாய்ப்பான வரிகளை எப்படி கவிஞர் பாரதிதாசனின் உணர்வுகள் வெளிப்படும்படி இசை அமைத்தார், 'அழகிய தமிழ் மகளின்' துவக்கத்தில் வரும் இசை எப்படி நினைவுகள் உள்ளடங்கிக் கனவு மலர்வதைப் பிரதிபலிக்கிறது, 'மதுரா நகரின்' முதல் இரண்டு சரணங்களின் இணைப்பிசை ஒரே மாதிரி இருப்பதும், மூன்றாவது சரணத்தின் இணைப்பிசை வேறு விதமாகவும் இருப்பது ஏன், ராகமாலிகையில் அமைந்த 'கேள்வியின் நாயகனே' பாடலின் நுணுக்கங்கள், குறிப்பாக, கடைசிச்சரணம் மத்தியமாவதியில் அமைந்திருப்பதின் காரணம் போன்றவற்றை இவர்கள் விவரித்ததை ரசிகர்கள் வியப்புடனும், உற்சாகத்துடனும், ஆனந்ததுடனும் ரசித்ததை, ஒரு பார்வையாளனாக என்னால் பக்கத்தில் இருந்து பார்க்க முடிந்தது.

ஆயினும் என்னைப் பொறுத்தவரை ஒரு ஏமாற்றம். 'சித்திரை மாதம்' பாடலை சிறப்பாக விளக்கப் போகிறார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், (ரயில் சத்ததை ஏற்படுதுவதற்காக) உப்புக் காகிதம் தேய்க்கும் உத்தியை எம் எஸ் வி 1954இல் வந்த போர்ட்டர் கந்தன் படத்திலேயே துவங்கி விட்டார் என்று குறிப்பிட்டது, இந்தப் பாடலின் பிரமிக்கத்தக்க இசை முயற்சிக்கு நியாயம் செய்வதாக இல்லை.

அதிகம் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், நிகழ்ச்சியை மிக நீளமாக அமைத்து விட்டார்களோ என்று தோன்றியது. மாலை ஆறு மணிக்கு முன்பு இது போன்ற நிகழ்ச்சிகளைத் துவக்குவது நடைமுறையில் சாத்தியமில்லை. ஒன்பது மணிக்கு மேல் நிகழ்ச்சி தொடர்ந்தால், சொந்த வாகன வசதி இல்லாதவர்களுக்கு சிரமமாக இருக்கும். இசை நிகழ்ச்சிகளுக்கு நூறு, இருநூறு என்று கட்டணம் செலுத்தி ரசிக்க முடியாத பல கீழ் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் இது போன்ற நிகழ்ச்சிக்கு ஆர்வமாக வருவார்கள். இனி வரும் நிகழ்ச்சிகளை ஒன்பது மணிக்கு நிறைவு செய்யும் விதமாகத் திட்டமிடலாம் என்பது எனது கருத்து.

இசைக்குழுவினரின் முயற்சி பாராட்டுதற்குரியது. குறிப்பாக, வழக்கமாகப் பாடப் படாத பல பாடல்களைப் பயிற்சி செய்து நிகழ்ச்சியில் இடம் பெறச் செய்ததைப் பாராட்ட வேண்டும். ஆரம்பத்தில் சில பாடல்களில் தாள வாத்திய்ங்களின் தொனி சற்று தூக்கலாக இருந்ததாக எனக்குத் தோன்றியது. 'மதுரா நகரில்', 'என்னுயிர்த்தோழி' போன்ற கடினமான பாடல்களைத் தவிர்த்து மற்ற பாடல்களில் இசைக்குழுவினரின் பங்கேற்பு மிகச் சிறப்பாகவே இருந்தது.

கோவை முரளியும், ஜெயஸ்ரீயும் இவ்வளவு உற்சாகமாகப் பாடியதை இதுவரை நான் பார்த்ததில்லை. நமது உறுப்பினர்கள் திரு சம்பத்தின் குமாரி அர்ஷிதா ('சித்திரை மாதம்'), திரு சுந்தரராஜனின் புதல்வி தாரிணி ('வெள்ளி மணி') ஆகியோரும் சிறப்பாகப் பாடலை அனுபவித்துப் பாடினார்கள். 'ஆறொடும் மண்னின்' பாடலில் சீர்காழியின் வரிகளை பாடுவதற்காகத் திருவண்ணாமலையில் இருந்து வந்த விவசாயியும் அருமையாகப் பாடினார்.

வைத்தியின் அறிமுக உரை, பேராசிரியர் ராமனின் முகவுரை மற்றும் நன்றியுரை, திரு சுதாங்கனின் சிற்றுரை, சென்னைத் தமிழ்ச் சங்கம் திரு ப.லக்ஷ்மணனின் பாராட்டுரை, எம் எஸ்வியின் வாழ்த்துரை போன்ற மற்ற பல விஷயங்களையும் விரிவாக எழுதினால் இந்தக் கட்டுரை இன்னும் நீண்டு விடும் என்பதால், இவற்றைக் குறிப்பிடுவதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

'நாதமெனும் கோவிலிலே' என்பது நிகழ்ச்சியின் பெயர். இந்தப் பாடலின் அடுத்த வரி,
'ஞான விளக்கேற்றி வைத்தேன்'
என்பதாகும்.

முரளியும், வத்ஸனும், 'நாதமெனும் கோவிலிலே (மூலம்) (ஒரு) ஞான விளக்கு ஏற்றி வைத்திருக்கிறார்கள். இந்த விளக்கின் ஒளி சிலருக்கு இசை தெய்வத்தின் அழகைக் கொஞ்சம் கோடிட்டாவது காட்டியிருக்கும். எதிர்காலத்தில், இந்த விளக்கின் சுடரிலிருந்து மேலும் பல விளக்குகள் ஏற்றப்பட்டு, இந்த இசை ஆலயம் ஒளிப்பிழம்பாகக் காட்சி அளிக்கலாம்.

கோவிலில் விளக்கு ஏற்றுவது இறைவனுக்கு வெளிச்சம் வேண்டும் என்பதற்காக அல்ல. கருவறையின் இருட்டில் இருக்கும் இறைவனின் திருவுருவைத் தரிசிக்க நமக்கு ஒளி வேண்டும் என்பதற்காக. இந்த நிகழ்ச்சிக்கு 'நாதமெனும் கோவிலிலே' என்று அருமையான பெயர் அமைந்தது ஒரு அற்புதமான விஷயம்.


கடைசியாக ஒரு வார்த்தை. கட்டுரையின் முதல் வரியை மீண்டும் படியுங்கள்.
நன்றி!

 You can view the video of one song presented in the program.
வெள்ளிமணி ஓசையிலே 


Visit 
MSV Times

செவ்வாய், 4 ஜனவரி, 2011

4. சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ

பாடல்: சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
படம்: சந்திரோதயம்
பாடலாசிரியர்: வாலி
இசை: எம் எஸ் விஸ்வநாதன் 

சந்திரோதயம்.

மிகவும் சாதாரணமான, சுவாரஸ்யமற்ற கதையைக் கொண்ட இப்படத்துக்கு முத்து முத்தான பாடல்களை எழுதியிருக்கிறார் வாலி. அவை அனைத்துக்கும் சத்தான இசையை ஊட்டி, உலவ விட்டிருக்கிறார் மெல்லிசை மன்னர்.

இது ஒரு வழக்கமான காதல் டூயட்தான் என்றாலும், இதை ஒரு சிற்பம் போல் மிக அழகாகச் செதுக்கியிருக்கிறார் வாலி. 


இந்தப் பாடலில் நாயகன் பாடும் வரிகள் வழக்கமானவைதான். ஆனால் நாயகியின் வரிகளில்தான் வைரங்களைப் புதைதிருக்கிறார் இந்த வித்தகக் கவிஞர். ஒரே பாடலில் எத்தனை உவமைகள்1 இத்தனை உவமைகள் நிறைந்த பாடல் வேறொன்று இருக்குமா ('அத்திக்காய்' நீங்கலாக) என்பது சந்தேகம்தான்!

இசை பற்றிப் பேசும் அறிவு எனக்கு இல்லை என்பதால், இசையின் சிறப்புகளைப்பற்றி அதிகம் குறிப்பிடப் போவதில்லை. ஆயினும் என் பாமர அறிவுக்குப் புலப்பட்ட ஓரிரு கருத்துக்களை மட்டும் குறிப்பிட விழைகிறேன். இந்தப் பாடலில் இசைக் கருவிகளைக் குறைந்த அளவே பயன்படுத்தியிருக்கிறார் மெல்லிசை மன்னர்  என்று தோன்றுகிறது - பாடல் முழுவதும் அவர் நடத்தியிருக்கும் கச்சேரிக்கு இசைக் கருவிகள் தடங்கலாக இருக்கக் கூடாது என்பதாலோ என்னவோ!

மிக எளிமையான் துவக்க இசை. கட்டியம் கூறும் குழல் இசை (பாடல் முழுவதிலுமே, புல்லங்குழலின் இனிமைதான் தூக்கி நிற்கிறது.) ஒரு பிரம்மாண்டமான இசை வேள்வி நடக்கப்போகிறது என்பதற்கான எந்த ஒரு குறிப்பும் இல்லாமல் மெல்ல, மென்மையாக ஆர்ப்பட்டமில்லாமல் இசைத்து விட்டுப் போகிறது துவக்க இசை.

கேட்டவுடனேயே மயங்க வைக்கும் இனிமையான் பல்லவியை டி எம் எஸ் துவங்கி வைக்கிறார். பல்லவியிலேயே மூன்று உவமைகளைத் தாராளமாக, அநாயாசமாக, 'இந்தா எடுத்துக் கொள்' என்பதுபோல், எடுத்து வீசியிருக்கிறார் கவிஞர் வாலி.

சந்திரோதயம் ஓரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ
பொன்னோவியம் என்று பேரானதோ
என் வாசல் வழியாக வலம் வந்ததோ
(சந்திரோதயம்)

அடுத்து நாயகி தன்னைப் பற்றிப் பேசுகிறாள். " நான் எப்படிப்பட்டவள் தெரியுமா?"

குளிர்காற்று கிள்ளாத மலர்
கிளி வந்து கொத்தாத கனி
நிழல்மேகம் தழுவாத நிலவு

வியப்பாக இருக்கிறதா? ஆயினும் என்ன? இப்படிப்பட்டவளை நீ உன் நெஞ்சோடு சேர்த்துக் கொண்டு விட்டாயே!

இந்த வரிகளில் நாயகியின் பெருமை தெரிகிறது. 'எப்படிப்பட்ட தூய்மையான பொருளை நீ அடைந்திருக்கிறாய் என்பதை நீ உணர வேண்டும்' என்று நாயகனுக்கு உணர்த்துவதாக அமைந்திருக்கின்றன இவ்வரிகள்.

'இப்படி என்னைத் தூய்மையாக வைத்துக் கொண்டதெல்லாம் நீ உன் நெஞ்சுடன் என்னை இணைத்துக் கொள்ளத்தானா?' என்ற (போலியான) ஆதங்கமும் இவ்வரிகளில் ஒலிக்கிறது.

இவ்வரிகளுக்கு இன்னொரு விதமாகவும் பொருள் கொள்ள முடியும்.
குளிர் காற்று கிள்ளாத (என்ன அருமையான சொல்! குளிர் காற்று உடலில் படும்போது ஏற்படும் சிலிர்ப்பை 'கிள்ளல்' என்று வர்ணித்திருக்கிறார் கவிஞர். ஆங்கிலத்தில் 'tickling sensation' என்று சொல்லலாமோ?) மலர், கிளி வந்து கொத்தாத கனி, நிழல் மேகம் தழுவாத நிலவு இவை எல்லாம் இயற்கையில் இருக்க முடியாதே? அப்படியானால் நான் மட்டும் எப்படி? நீ என்னை உன் நெஞ்சோடு சேர்த்துக் கொண்டு விட்டதால் வேறு எந்த விதத் தீண்டல்களும் எனக்கு ஏற்படவில்லை!

குளிர்காற்று கிள்ளாத மலரல்லவோ
கிளி வந்து கொத்தாத கனியல்லவோ
நிழல்மேகம் தழுவாத நிலவல்லவோ
நெஞ்சோடு நீ சேர்த்த பொருளல்லவோ
எந்நாளும் பிரியாத உறவல்லவோ

இதைத் தொடர்ந்து, நாயகி நாயகனை வர்ணிக்கும் பல்லவி

இளம் சூரியன் உந்தன் வடிவானதோ
செவ்வானமே உந்தன் நிறமானதோ
பொன்மாளிகை உந்தன் மனமானதோ
என் காதல் உயிர் வாழ இடம் தந்ததோ

பாடல் இன்னும் பாதி கூட முடியவில்லை. அதற்குள் பன்னிரண்டு உவமைகளை அள்ளித் தெளித்து விட்டார் இரண்டாம் கம்பன்! உவமைக் கவிஞர் என்ற பட்டம் இவருக்கும் பொருந்தும் - இந்த ஒரு பாடலுக்காகவே!

இளம் சூரியன் உந்தன் வடிவம், செவ்வானம் உந்தன் நிறம் என்பதெல்லாம் வழக்கமான (ஆயினும் சிறப்பான) வர்ணனைகள். (எம்ஜியாரின் தோற்றத்துக்கும் அவருடைய அன்றைய அரசியல் சார்புக்கும் கூடப் பொருந்துபவைதான்.)

ஆனால் 'பொன்மாளிகை உந்தன் மனமானதோ' என்ற வரியில் ஒரு பொடியை (பொறியை) வைத்திருக்கிறார் கவிஞர், 'என் காதல் உயிர் வாழ இடம் தந்ததோ' என்ற அடுத்த வரியின் மூலம். 'நீ பொன்மனச் செம்மல்தான். ஆனால் அது எதனால்? என் காதல் உன் மனதில் உயிர் வாழ்கிறதே அதனால்தான். என் காதல்தான் பொன். அது உன் மனதில் இருப்பதால்தான் அது பொன் மாளிகை!'

மீண்டும் பல்லவியின் இரு வரிகளைப் பாடுகிறார் நாயகி.
(இளம் சூரியன்)

இந்த இடத்தில் மெல்லிசை மன்னருக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது. இது ஒரு நீளமான பாடல். இந்த நீளமான பாடலின் சுருக்கத்தை அளித்தால் என்ன? எப்படி அளிப்பது? ஒரு ஹம்மிங் மூலமாகத்தான்!
ஆஹாஹாஹா.......

என்ன ஒரு ஹம்மிங் (இதற்குச் சரியான தமிழ்ச் சொல் இருக்கிறதா?)
இந்த ஹம்மிங்கைக் கேட்கும்போது எனக்கு வேறு இரண்டு ஹம்மிங்குகள் நினைவுக்கு வருகின்றன. மூன்றையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது, எனக்குத் தோன்றிய உணர்வு இது. இசை வல்லுநர்கள் எப்படிப் பார்ப்பார்களோ தெரியாது!

இந்தப் பாடலின் ஹம்மிங், காற்றில் லேசாக மிதப்பது போன்ற உணர்வைத் தருகிறது. இங்கே நாயகி இப்போதுதான் காதலின் உணர்வை அறியத் தொடங்கியிருக்கிறாள்.

'சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து' பாடலில் வரும் ஹம்மிங், ஒரு இன்பக் கடலில் மூழ்கி மூழ்கி எழும் உணர்வை வெளிப்படுத்துகிறது. இந்த நாயகியின் காதல் உறுதியாகி விட்ட ஒன்று.

'யாருக்கு மாப்பிள்ளை யாரோ'வில் வரும் ஹம்மிங் நாயகியின் உல்லாசமான, குறும்புத்தனமான, சீண்டிப் பார்க்கும் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது.

பகவத் கீதையை முழுமையாகப் படிக்க முடியாதவர்கள், 'ஸர்வ தர்மான் பரித்யஜ்ய...' என்ற சரம ஸ்லோகத்தை மட்டும் படித்தால் போதும் என்று சொல்வார்கள். அது போல், இந்தப் பாடலை முழுமையாகக் கேட்க நேரம் இல்லாவிட்டால், இந்த ஹம்மிங்கை மட்டும் கேட்டுப் பாடல் முழுவதையும் கேட்ட உணர்வைப் பெறலாம்!

மீன்டும் நாயகன் பாடும் சரணம்.

முத்தாரம் சிரிக்கின்ற சிரிப்பல்லவோ
முழுநெஞ்சைத் தொடுகின்ற நெருப்பல்லவோ
சங்கீதம் பொழிகின்ற மொழியல்லவோ
சந்தோஷம் வருகின்ற வழியல்லவோ
என் கோவில் குடிகொண்ட சிலையல்லவோ
(சந்திரோதயம்)

இப்போது கவிஞர் விஸ்வரூபம் எடுக்கிறார்- இவ்வளவு நேரம் சொன்னதெல்லம் மிகவும் சாதாரணம் என்பதுபோல. 


நாயகி திருமணத்தை வெறுத்தவள். அவள் காதல் வயப்படும்போது, அந்த மாற்றம் படிப்படியாகத்தான் நிகழ வேண்டும். முதலில் தன்னைப் பற்றிக் கூறி விட்டுத் தான் நாயகனுக்கு ஏற்றவள்தான் என்ற கருத்தை முன் வைக்கிறாள். இப்போது நாயகன் அவளை முழுவதுமாக ஏற்றுக் கொண்டு விட்டான் என்று தெரிந்ததும், அவனோடு தான் இணைய விரும்புவதைத் தெரிவிக்கிறாள். முதலில் உவைமைகளில் துவங்குகிறாள்.

அலையோடு பிறவாத கடல் இல்லையே
நிழலோடு நடக்காத உடல் இல்லையே
துடிக்காத இமையோடு விழியில்லையே

உவைமைகளை அடுக்கிக் கொண்டே போவதில் கவிஞருக்கு எந்த ஒரு சிரமும் இருப்பதாகத் தெரியவில்லை.

எவ்வளவு நேரம்தான் மறைமுகமாகப் பேசிக் கொண்டிருப்பது? இதற்கு மேல் தயங்கக் கூடாது என்று முடிவு செய்து, அடுத்த வரியில் தன் விருப்பத்தை நேரடியாகவே சொல்லி விடுகிறாள் நாயகி .

துணையோடு சேராத இனம் இல்லையே!

இவ்வளவு நேரம் சொன்னதெல்லாம் பொருள்களைப் பற்றி. உயிர் இனங்களும் அப்படித்தான் என்று வலியுறுத்துவது போல், 'துணையோடு சேர்வது எல்லா  உயிரினங்களுக்கும் இயல்பான ஒன்றுதான். எனவே என் மனதைப் புரிந்து கொள்' என்ற செய்தியைச் சொல்லி முடிக்கிறாள்.

இப்போதுதான் நாயகிக்குத்த் தான் செய்த தவறு உரைக்கிறது. 'நான் சொன்ன உவமைகள் எல்லாம் சரிதானா? ஏதோ ஒன்று உதைக்கிற மாதிரி இருக்கிறதே! ஆமாம். நான் முதலில் சொன்ன மூன்று உவமைகளுக்கும், கடைசியாகச் சொன்ன உவமைக்கும் ஒரு அடிப்படையான வேறுபாடு இருக்கிறதே!'

அலையும் கடலும் ஒன்றுதான்.
உடலோடு பிறந்ததுதான் நிழல்.
இமையும் விழியும் எப்போதுமே இணைந்துதான் இருந்து வந்திருக்கின்றன.

ஆனல், உயிர் இனங்களில், ஒரு ஆணும், ஒரு பெண்ணும் தனித்தனியே பிறந்து வளர்ந்து, பின்னே இணைகிறார்கள். இது எப்படி மற்ற உவமைகளுடன் பொருந்தும்?

இந்தமுரண்பாட்டைச் சரிக்கட்டுவதற்காக, நாயகி புத்திசாலித்தனமாக, அவசரமாக, அடுத்த வரியை அமைக்கிறாள்.

'என் மேனி உனதன்றி எனதில்லையே'

அதாவது, அலை 
எப்படி கடலுக்குச் சொந்தமோ, நிழல் எப்படி உடலுக்குச் சொந்தமோ, இமை எப்படிக் கண்களுக்குச் சொந்தமோ, அதுபோல் நான் உனக்குச் சொந்தம். எனவே கடைசியாக நான் சொன்னது ஒரு சம்பிரதாயமான உவமைதான். முதலில் சொன்ன மூன்று உவமைகள்தான் எனக்கும் உனக்கும் பொருந்தும்.

இந்த 'விளக்கத்தை' அவள் அவசரமாக வெளிப்படுத்துவது இசையிலும் பிரதிபலிக்கிறது. 'துணையோடு சேராத இனம் இல்லையே' என்ற வரியைத் தொடர்ந்து, ஒரு சிறு கால இடைவெளி கூட இல்லாமல், அவசரமாகச் சொல்வது போல், 'என் மேனி உனதன்றி எனதில்லையே' என்று வருவது சிறப்பு. எனினும், முதல் சரணத்திலும் இவ்வாறே வருவதால், இது தற்செயலாக அமைந்தது என்றுதான் கருத வேண்டும். ஒரு தெய்வீக இசை அமைப்பில், இது போன்ற 'தற்செயலான ஆச்சரியங்கள்' அமைவதில் வியப்பில்லை.

நாயகியின் இந்த வரிகளைக் கேட்டதும், நாயகனுக்கு உற்சாகம் பிறந்து விடுகிறது. காதலியுடன் இணைவதை நினைத்து, நாயகன் பாடத் துவங்கி விடுகிறான்.

இதழோடு இதழ் வைத்து இமை மூடவோ
இருக்கின்ற சுகம் வாங்கத் தடை போடவோ
மடிமீது தலை வைத்து இளைப்பாரவோ
முகத்தோடு முகம் வைத்து முத்தாரவோ
கண்ஜாடை கவி சொல்ல இசை பாடவோ

இவை பழைய (கிராமஃபோன்) இசைத்தட்டுக்களில் இடம் பெற்ற வரிகள். சென்சாரின் வலியுறுத்தலாலோ என்னவோ, திரையில், இந்தச் சரணம் முழுவதுமாக மாற்றப்பட்டது. வாலியின் கற்பனை, உச்சியில் பறந்த வேளையில் நமக்குக் கிடைத்தது ஒரு கூடுதலான சரணம்.

எழிலோடு எழில் சேர்த்து இமை மூடவோ
எனக்கென்று சுகம் வாங்கத் துணை தேடவோ
மலர்மேனிதனைக் கண்டு மகிழ்ந்தாடவோ
மணக்கின்ற தமிழ் மண்னில் விளையாடவோ
கண்ஜாடை கவி சொல்ல இசை பாடவோ
(சந்திரோதயம்)

பாடல் ஒரு சிறிய ஹம்மிங்குடன் முடிகிறது. இந்த ஹம்மிங் சற்று அழுத்தமாக அமைந்திருப்பதைக் கவனிக்கலாம். நாயகியின் தயக்கமான் துவக்கம், முழுமையான ஆனந்தத்தில் முடிவதை ஹம்மிங் மாறுபாடு உணர்த்துகிறது.

நாயகியின் சுய அறிமுகம், தன் விருப்பத்தை மெலிதாக வெளிப்படுத்துதல், நாயகனுடன் இணைதல் என்று மூன்று நிலைகளில் சரணங்களை அமைத்திருப்பது வாலியின் சிறப்பு.

பெரும்பாலும், நாயகனுக்கு ஒரு விதமான் பல்லவி, நாயகிக்கு சற்றே வேறுபாடான பல்லவி (அனுபல்லவி?) என்று அமைக்கும் மெல்லிசை மன்னர், இந்தப் பாடலில், நாயகன் நாயகி இருவருக்கும் ஒரே விதமான பல்லவியை அமைத்து (வரிகள் வேறுபட்டபோதிலும்), இருவருக்கும் வெவ்வேறு விதமான சரணங்களை அமைத்திருப்பது புதுமை!

இந்தப் பாடலைக் கேட்கும்போது, இது காற்றினிலே மிதந்து வரும் கீதம் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. ஒரு இனிமையான தென்றல் நம்மைத் தீண்டி விட்டுப் போவது போன்ற உணர்வு!

மெல்லிசை மன்னரின் மாணிக்கக் கற்கள் பதித்த வாலியின் வைர வரிகள் இதோ இசை வடிவில் :


3. A Tribute to MSV

மெல்லிசை மன்னரே!
நீங்கள் உலகம் சுற்றும் வாலிபன் இல்லை
வாலிபன் சுற்றும் உலகம்!
என் போன்றவர்கள்
வாலிப வயதில் சுற்றி வந்தது
உங்கள் இசையைத்தானே?

குமரிப்பெண்ணுக்காகக்
காத்திருந்த கண்கள் அல்ல
எங்களுடையவை.
குமரிக் கோட்டத்தைப் 
பார்த்தால் பசி தீரும்
என்றிருந்த இளைஞர்களிடையே,
உங்கள் இசையைக்
கேட்டால்தான் பசி தீரும் என்று
தவம் இருந்தவர்கள் நாங்கள்.

உங்கள் இசையிலேயே நாங்கள்
சொர்க்கம் கண்டதால்,
எங்களுக்குக்
காதலிக்க நேரமில்லை.
மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்
என்று இருந்து விட்டோம்.
அன்னையும் பிதாவும்
காட்டிய வழியிலேயே சென்றது
எங்கள் வாழ்க்கைப்படகு.

நம் நாட்டின் தவப்புதல்வரே!
நீங்கள் பிறந்த இடம் கேரளமாக இருந்தாலும்
நீங்கள்
எங்க ஊர் ராஜா
எங்க வீட்டுப் பிள்ளை.
மெல்லிசை
மன்னவன் வந்தானடி
என்று நாங்கள் மகிழ்ச்சி கொண்டோம்.

பாலும் பழமும் கொடுத்துப்
பிள்ளையை வளர்ப்பார் சிலர்.
ஆனால் உங்கள் தெய்வத்தாய்
உங்களைப்
பிள்ளையோ பிள்ளை
என்று கருதித்
தேனும் பாலும் கொடுத்து
வளர்த்திருப்பார்கள் போலும்!
அதனால்தான்,
நினைத்தாலே இனிக்கும்
சுகமான ராகங்களைக்
கர்ணன் போல்
வாரி வழங்கி வருகிறீர்கள் நீங்கள்!

கேட்டதையெல்லாம் கொடுக்கும்
மரம் ஒன்று உண்டு
விண்ணுலகில்.
அதன் பெயர் கற்பகம் என்பார்கள்
ஆனால் நீங்களோ
நாங்கள் கேளாமலே
அள்ளித் தருகிறீர்கள்
உங்கள் இசை அன்பளிப்பை


நல்லிசையை
மெல்லிசையாய்  வடித்து
நீங்கள் தரும் பாடல்களைச்
சிலர் வசந்த ராகம் என்பார்கள்.
வேறு சிலர்
அபூர்வ ராகங்கள்
என்பார்கள்.
எங்களுக்கோ,
உங்கள் இசை
எங்கள் நாடி நரம்புகளில்
ஓடும் நதி.
என்றும் வற்றாத
ஜீவ நதி.
எங்கள் இதயங்களில்
ஒளிவிளக்காய்ச்
சுடர் விடும்
ஆனந்த ஜோதி
அணையா விளக்கு.

நீங்கள் ஒரு
கலைக்கோயில்.
ஏனெனில் உங்கள் நெஞ்சம்
இசை குடியிருந்த கோயில்.
(என்றும் குடியிருக்கும் கோயில்)
ஆயிற்றே?
உங்கள் படைப்புகள் எல்லாம்
அந்த இசைக்கோயில்
பூஜைக்கு வந்த மலர்.
இசை மீது
நீங்கள் வைத்திருக்கும்
பாசம்தான்
அதன் ஆலய தீபம்.

அவன்தான் மனிதன்
அவன் ஒரு சரித்திரம்
ஆயிரத்தில் ஒருவன்
உயர்ந்த மனிதன்
இவையெல்லாம்
நீங்கள் இசை அமைத்த படங்கள்.
இவற்றுக்குப் பெயர் வைத்தவர்கள்
உங்களை மனதில் கொண்டுதான்
வைத்திருப்பார்களோ?

நீயும் நானும்
என்று இணைந்திருக்கும்
நண்பர்கள் பலர் உண்டு
இவ்வுலகில்.
ஆனால்,
உனக்காக நான், எனக்காக நீ
என்று வாழ்ந்தவர்கள்
நீங்களும் கவியரசரும்.
மெல்லிசை மன்னர்கள் இருவரும்
கவியரசரும் இணைந்தால்
அது ஒரு
திரிசூலம்.
எங்களுக்கோ,
நீங்கள்
மூன்று தெய்வங்கள்.

லக்ஷ்மி கல்யாணம்
உங்கள் சீர்வரிசையில்தானே  நடந்தது?
அனுபவி ராஜா அனுபவி என்று
கலாட்டா கல்யாணத்துக்குப்
பச்சை விளக்கு காட்டியவரும்
நீங்கள்தான்!

இசைக்கடலில் பயணம் செய்யும்
பலருக்கு
நீங்கள் ஒரு
கலங்கரை விளக்கம்.
நல்லிசையை நாடித் திரியும்
இசை ரசிகர்களாம்
சாதகப் பறவைகளுக்கோ
நீங்கள் ஒரு
சரணாலயம்.

இது பாராட்டுரை அல்ல.
உங்கள் சாதனைகளுக்குத் தலை வணங்கி

நான்  சமர்ப்பிக்கும்
பாத காணிக்கை.

2. MSV wields his magic wand, yet another time.

    Music Festival – Tamil Isai Sangam

Mr. M.S.Viswanathan (MSV, as he is popularly and affectionately known), the legendary music composer of Tamil films, whose songs composed for films released in the late fifties, sixties, seventies and eighties are still the favorite for being telecast in several Tamil television channels today, was conferred the ‘Isai Perarignar’ award, by Tamil Isai Sangam, several years ago. For the past 8 years, MSV’s film music concert has become one of the regular events during the annual music festival of Tamil Isai Sangam.

This year, MSV’s program was on the evening of the Christmas day. It is no exaggeration to say that the energetic octogenarian was at his best, as he always is. The most astonishing feature of the concert was MSV’s active involvement from the beginning to the end. He can never be passive, sitting and quietly watching the music to flow from his impeccable orchestral players. 

As Mr. Lakshmanan Chettiyar, who, as a senior member of Tamil Isai Sangam, presided over and compeered the program, observed, MSV could make his orchestra perform perfectly by a simple batting of his eyelids. 

But this committed composer could not help involving himself in the performance, getting up from his seat every often and directing the orchestra with the energetic and enthusiastic waving of his hands, despite the fact that his able assistant Ananthanarayanan (Ananthu) was doing an admirable job conducting the music, in addition to singing a number of songs. 

The second impressive feature of the event was that even with minimal orchestral instruments, the team was able to recreate the songs as close to the originals as a team with a much larger orchestra could, meticulously capturing the innumerable nuances, which form the unique feature of MSV’s music.

Mr. Lakshmanan Chettiyar pointed out at the outset that film music is not to be considered trivial and that MSV’s light music is a form of Tamil Isai. The songs selected for the day had the theme ‘Akkarai Pachai’ (The other side is always green). 

The concert appropriately started with the song Akkarai Pachai from the film of the same title, after the conventional prayer song extolling Ganapathy, a Bharathidasan’s poem on Tamil and the inevitable ‘Pullanguzhal koduththa moongilgale’ of Kannadasan, a song which the late lyricist and soul mate of MSV had ordained to be played by MSV in all his concerts! 

With Mr. Lakshmanan Chettiyar developing the theme in the form of a story, the concert evolved with one beautiful number following the other. 

Some of the songs like ‘Aarodum mannil,’ ‘Sondham Eppodhum thodarkadhaitjhaan,’ ‘Rukkumaniye,’ ‘Ennai eduththu,’ ‘Chellakkiliye mellap pesu, ‘Vandha naal mudhal, ‘Partha gnabakam illaiyo,’ ‘Silar sirippaar’ are very rare to be presented in music programs on the stage. 

The audience was electrified and went into raptures with most of these songs, with Annamalai Mandram Auditorium reverberating with their loud and spontaneous ovation.

While some non-film songs like a Tiruvachakam hymn and a Kannadasan number on Kanchi Kamakshi were included in the menu in keeping with the Tamizh Isai Sangam's commitment to propagate
Tamil literary compositions, 'ullam rendum ondru' from 'Pudhumaippiththan' composed by the late G.Ramanathan and 'avala sonnal, irukkaadhu' from 'Selvam' composed by the late K.V. Mahadevan were included to show MSV's respect for his senior composers. 

Thyagaraja bhagavahar, whose centenary falls this year was honored by the rendering of his popular number 'Satva guna bhodhan' by Ananthu. 

The other singers for the evening were the well known Kovai Murali and Jayashri, with the young girl Deepashika also making a mark for herself. The percussion artist Ganesh lent his voice to  'pirakkumpothum azhukindra' originally sung by the legendary Chandrababu.

Mr. Lakshmanan Chettiar was profuse in his appreciation for MSV by citing a few incidents involving MGR and some composers of Hindi films. He described MSV as a peerless composer who could enthrall people belonging to various generations. In support of this, he cited the fact that the audience consisted of a wide range of age groups from 13 years to 80 years.

The concert had an apt ending with three songs signifying the occasion: 'naalai namadhe,' a song of hope to herald the new year, 'vaanaththilirundhu,' a hymn on Jesus Christ penned by Mr. Kamakotiyaan, as an apt presentation on the Christmas day and Bharathiyar's 'vaazhiya thamizh mozhi,' a song paying tribute to Mother Tamil and Mother India.

Review of 2010 Program